‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
டி.எம்.எஸ். என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பிரபல சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலும், மழையும் மாறி மாறி வருதால், சீதோஷ்ண நிலை ஒத்துக் கொள்ளாமல் டி.எம்.எஸ்-க்கு குளிர் காய்ச்சல் வந்து விட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்கும் ஏராளமான பாடல்களை பாடியவர் டி.எம்.எஸ்., குளிர் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.