ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
விஜய் நடிக்கும் பைரவா படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. பைரவா பற்றிய முதல் முன்னோட்டம் இது...
படத்தை தயாரிப்பது பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன். தயாரிப்பாளர்கள் வெங்கட்ராம ரெட்டி, பாரதியம்மா. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், அனல் அரசு சண்டை காட்சிகளை அமைக்கிறார், தினேஷ் மாஸ்டர் நடன காட்சிகளை அமைக்கிறார். எடிட்டர் பிரவீன்.
விஜய் முதன் முதலாக இரட்டை வேடங்களில் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன், 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யை இயக்குகிறார்.
படத்தின் பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். மொத்தம் 6 பாடல்கள். "பட்டய கிளப்பு பட்டய கிளப்பு பட்டிதொட்டியெல்லாம் பட்டய கிளப்பு..." என்கிற ஓப்பனிங் சாங் நிஜமாகவே பட்டைய கிளப்பும் என்கிறார்கள்.
ஹீரோயின் கீர்த்தி சுரேஷ். வில்லன் டேனியல் பாலாஜி. காக்க காக்க படத்திற்கு பிறகு சரியான வாய்ப்புகள் அமையாத டேனியல் பாலாஜிக்கு ஒரு ரீ-என்ட்ரி. கீர்த்தி சுரேஷ் மிக குறுகிய காலத்தில் டாப் ஸ்டாருக்கு ஜோடியாகியிருக்கிறார்.
சமூகத்தில் இன்றைக்கு நிலவும் ஒரு முக்கிய பிரச்னை பற்றி பேசுகிற படம். சமூக பொறுப்புள்ள இளைஞனாக விஜய் நடித்திருக்கிறார். எல்லா கமர்ஷியல் அம்சங்களையும் கலந்து, அந்த சமூக பிரச்சினையை சொல்கிறது படம்.
50 சதவிகித கதை திருநெல்வேலியிலும், 50 சதவிகித கதை சென்னையிலும் நடக்கிறது. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டையும், திருநெல்வேலி கோவிலையும் பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு படமாக்கி உள்ளனர்.
விஜய் முதன் முதலாக விக் வைத்து நடிக்கிறார்.
படத்தின் பட்ஜெட் 100 கோடி. ஜனவரியில் பொங்கல் ரீலீசாக இருக்கலாம்.