போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மாஜி ஹீரோக்கள் முரளி மகன் அதர்வாவும், கார்த்திக் மகன் கவுதமும் ஒரே காகலட்டத்தில் அறிமுகமானார்கள். அதர்வா பானா காத்தாடி படத்தில் ஒரு புதுமுக இயக்குனருடன்தான் அறிமுகமானார். ஆனால் கவுதம் மணிரத்னம் இயக்கத்தில் அதுவும் அப்பாவின் முதல் ஜோடியான ராதாவின் மகள் துளசியுடன் அறிமுகமானார். அதர்வா வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்து ஒரு இடத்தை பிடித்து விட்டார். ஆனால் கவுதமிற்கு தொடர் தோல்விகள் தான்.
அவர் அறிமுகமான கடல், என்னமோ ஏதோ, வை ராஜா வை படங்கள் அவருக்கு எந்த விதத்திலும் கை கொடுக்கவில்லை. அவர் நடித்து வரும் இந்திரஜித், ரங்கூன், சிப்பாய் படங்கள் தாமதமாகி வருகிறது. தற்போது புதுமுகங்களுடன் முத்துராமலிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். வெளிவர இருக்கும் 5 படங்களில் ஏதாவது ஒன்று ஹிட்டானால் போதும் கவுதம் கேரியர் ஆரம்பித்து விடும்.
இந்த நிலையில் தற்போது அவர் ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான், கண்டேன் காதலை, சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டுராஜா படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தின் தலைப்பு இவன் தந்திரன். கவுதம் ஜோடியாக கன்னட யூடேர்ன் படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார், ஆர்.ஜே.பாலாஜி காமெடியன். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார், வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை சூர்யா நேற்று வெளியிட்டார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.