இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
தீபாவளி நெருங்குவதால் பெரிய நடிகர்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் தீபாவளிக்கு வெளிவருவதா, தீபாவளிக்கு பின்னால் வெளிவருவதா என்ற குழப்பத்தில் இருப்பதால். இந்த வாரம் வெள்ளிக்கிழமை (நாளை) அதிக அளவில் 7 சிறு பட்ஜெட் படங்கள் வெளிவருகிறது.
இதில் மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்கா, திருமால் பெருமை இரண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் பக்தி படங்கள். ஒன்று கனகதுர்கா மகிமையையும், மற்றொன்று திருமால் மகிமையையும் பேச இருக்கிறது. நந்தா நடித்துள்ள கள்ளாட்டம் படம் ஒரு துப்பறியும் படம். 94 நிமிடம் ஓடும் இந்தப் படம் குழந்தைககைள மையப்படுத்திய திரில்லர். இதுதவிர புதுமுகங்கள் உருவாக்கிய ஆசி என்ற படம் வழக்கமான பேய் படம். நீ என்ன மாயம் செய்தாய் என்பது காதல் படம். கொள்ளிடம் படம் காவிரி டெல்டா பகுதி காதலை சொல்லும் படம். நுண்ணுர்வு மர்டர் மிஸ்ட்ரி மூவி.
இந்த படங்களுடன் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவருகிறது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைப் படம். இந்தியில் எம்.எஸ்.தோனி அன்டோல்டு ஸ்டோரி என்ற பெயரில் தயாராகி உள்ள படம். தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. இதுதவிர ராக் நடிக்கும் ஹாலிவுட் படமான சென்ட்ரல் இண்டலிஜன்ஸ் படம் இருவர் படை என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது. தி டேஞ்சரஸ் கேர்ள் என்ற ஹாலிவுட் படம் சகலாகலாவில்லிகள் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. இத்துடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ரிக்ஷாக்காரன் டிஜிட்டல் வடிவில் உயர் தொழில்நுட்பத்தில் வெளிவருகிறது.