ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
கே.பாக்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் அய்யனார் வீதி. அவருடன் பொன்வண்ணன், சிங்கம்புலி, மீரா கிருஷ்ணன், முத்துக்காளை உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இளம் ஹீரோ, ஹீரோயின்களாக சாட்டை யுவனும், ஷாரா ரெட்டியும் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீசாய் சண்முகா பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல் தயாரித்திருக்கிறார். யு.கே.முரளி இசை அமைத்திருக்கிறார், சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஜிப்ஸி ராஜ்குமார் இயக்கி இருக்கிறார்.
பத்திரிக்கையாளராக இருந்து இயக்குனராகியிருக்கும் ஜிப்ஸி ராஜ்குமார் படத்தை பற்றி கூறியதாவது: நான் ஜிப்ஸி தியேட்டர் என்ற பெயரில் தெரு நாடகங்கள் நடத்தி வருகிறேன். அந்த அனுபவத்தில் சினிமா இயக்க வந்திருக்கிறேன். ராஜபாளையம் மண்ணுக்கென்று தனி கலாச்சாரம் உள்ளது. மதுரை மற்றும் சிவகங்கை கலாச்சாரம் கலந்தது அது. அது இதுவரை முழுமையாக பதிவு செய்யப்படவில்லை. அந்த முயற்சியே படம்.
ஒரு அய்யர், அய்யனாராவதுதான் படத்தோட ஒன்லைன். கே.பாக்யராஜ் ஸ்கிரிப்ட், வசனத்தில் நிறைய உதவி செய்தார். ஜாதி மோதல்கள் நிறைந்த இந்த காலகட்டத்துக்கு தேவையான படம் என்று படத்துக்காக அதிக அக்கறை எடுத்துக் கொண்டார் அவர் இல்லாவிட்டால் படம் நிறைவடைந்திருக்காது" என்கிறார் ஜிப்ஸி ராஜ்குமார்.