‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
என்னை அறிந்தால், இருமுகன் படங்களுக்கு பிறகு எஸ்-3, சாமி-2, குமரி கண்டம், ஏ.ஆர்.முருகதாஸ் படம் என பல படங்களுக்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இதில் தற்போது சூர்யாவின் எஸ்-3 படத்திற்கான இசைப்பணிகளில் தீவிரமடைந்திருக்கிறார். இதற்கு முன்பு சூர்யா நடித்த, காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், மாற்றான் என பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ், இந்த படத்திலும் மெகா ஹிட் பாடல்களை கொடுத்து விட வேண்டும் என்று தீவிரமாக இறங்கியிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள அப்படத்தின் பாடல் களை படமாக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார் டைரக்டர் ஹரி. அதன் முதல் கட்டமாக சூர்யாவின் இண்ட்ரோ பாடலை தற்போது ரெக்கார்ட்டிங் செய்து முடித்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். அதோடு, சோனி சோனி சூப்பர் சோனிக் என்று தொடங்கும் அந்த பாடலின் முதல் வரியையும் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலைக்கேட்டதும் சூப்பர் என்று சொல்லி ஹாரிஸ் ஜெய ராஜை கட்டிப்பிடித்துக் கொண்டாராம் சூர்யா.