போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
காமெடியன் ட்ரேக்கில் இருந்து ஹீரோ ட்ரேக்கிற்கு மாறிய பிறகு பர்பாமென்ஸ் மட்டுமின்றி தனது உடல்கட்டையும் மற்ற ஹீரோக்களுக்கு இணையாக முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளார் சந்தானம். குறிப்பாக, நடன காட்சிகளில் அவரது நடிப்பைக்கண்டு ஏனைய இளவட்ட நடிகர்களெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து விட்டனர். அந்த அளவுக்கு ஸ்டைலிஷாக நடனமாடி வருகிறார் சந்தானம். அதுமட்டுமின்றி, உடல் வெயிட்டையும் குறைத்து சிக்ஸ்பேக் நடிகராகவும் மாறியிருக்கிறார்.
மேலும், தில்லுக்குத்துட்டு படத்திற்கு பிறகு அவரது வியாபார வட்டம் விரிவடைந்து விட்டதால், தற்போது சர்வர் சுந்தரம் மற்றும் புலியுடன் அவர் நடிக்கும் படங்களின் பட்ஜெட் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுவரை காமெடி கலந்த காதல் கதை, காமெடி கலந்த பேய் கதை என்கிற ரீதியில் மட்டுமே கதை கேட்டு வந்த சந்தானத்திற்கு இப்போது ஆக்சன் ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசையும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் புதிதாக தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம், ஆக்சன் ஸ்கிரிப்ட் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும் சந்தானம், அந்த படத்தில் அட்லிஸ்ட் பத்து சண்டை காட்சிகளாவது இருக்க வேண்டும் என்கிறாராம்.