‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குநர் நடிகராவது ஒன்று புதிதல்ல. பாலசந்தர், பாரதிராஜா, மணிவண்ணன் தொடங்கி சமீபத்தில் மகேந்திரன் வரை பலரை உதாரணமாக சொல்லலாம். அந்தவகையில் மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் படங்களின் இயக்குநர் கெளதம் மேனனும் விரைவில் ஒரு அழுத்தமான ரோலில் நடிகராக களமிறங்க உள்ளார். அது நயன்தாரா, அதர்வா நடிக்க உள்ள ‛இமைக்கா நொடிகள்' படம் தான் என்று கூறப்படுகிறது.
டிமான்டி காலனி எனும் த்ரில்லர் படத்தை இயக்கி வெற்றி பெற்ற அஜய் ஞானமுத்து தான் இந்தப்படத்தையும் இயக்க உள்ளார். இந்தப்படம் ஒரு ரொமான்ட்டிக், த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. இதில் அதர்வா தான் ஹீரோ. நயன்தாரா ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார், ஆனால் அதர்வாவுக்கு ஜோடியாக அல்ல. அதர்வா ஜோடியாக வேறு ஒரு ஹீரோயின் நடிக்கிறார். இந்தப்படத்தில் இயக்குநர் கெளதம் மேனன், நடிகராக அதுவும் வில்லனாக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஒரு இசை வெளியீட்டில் தான் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கெளதம் கூறியிருந்தார். அது இந்தப்படம் தான் என்று கூறப்படுகிறது. உள்ளார். அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள ‛இமைக்கா நொடிகள்' படத்தை, த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை தயாரித்த ஜெயக்குமார் தயாரிக்கிறார்.