ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த ஒரு திரைப்படமாக அமைந்த 'கபாலி' படம் ஜுலை 22ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெளியான நாளிலிருந்தே இருவேறு விதமான கருத்துக்கள் வலம் வந்தாலும் வியாபார ரீதியாக 'கபாலி' படம் மிகப் பெரும் சாதனையைப் புரிந்ததாக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணுவே அறிவித்தார். இருந்தாலும் சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காக படத்தை தோல்விப் படம் என்றே வேண்டும் என கருத்துக்களைப் பரப்பி வந்தனர்.
இதுவரை எந்த ஒரு வினியோகஸ்தரும், தியேட்டர்காரர்களும் படம் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது என்று சொல்லாத போது சிலர் அப்படிப்பட்ட கருத்துக்களைப் பரப்பியதற்குக் காரணம் சாதி துவேஷம் என சிலர் பதிலடி கொடுத்தனர்.
இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய மூன்றாவது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மூலம் என்ன கருத்தைச் சொன்னால் மக்களிடம் சென்று சேருமோ அதைச் சரியாகச் செய்திருந்தார். தன்னுடைய வழக்கமான கதாபாத்திரங்களிலிருந்து விலகி தன் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடித்து, குடும்பத்தினர் அனைவரும் வந்து படத்தைப் பார்த்து ரசிக்கும்படியான ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என நடுநிலை ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
கடந்த வார இறுதி நாட்களில் கூட படம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்களில் 90 சதவீதம் ரசிகர்கள் இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். 'கபாலி' படம் எத்தனை விதமான பேச்சுக்களையும், கருத்துக்களையும் பரப்பியிருந்தாலும் தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கியமான படமாக இடம் பிடித்துள்ளது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.