‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
காமெடி நடிகர் மனோபாலா தயாரித்து, திருப்பதி பிரதர்ஸ் வாங்கி வெளியிட்ட படம் 'சதுரங்க வேட்டை'. ஒளிப்பதிவாளர் என்கிற நட்டி என்கிற நட்ராஜ் கதாநாயகனாக நடித்த இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. எம்.எல்.எம், மண்ணுளி பாம்பு போன்ற தமிழகத்தில் நடக்கும் சில முக்கியமான மோசடிகளை கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த 'சதுரங்க வேட்டை' படம் வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது.
இப்படத்தின் இயக்குநர் வினோத் சதுரங்கவேட்டை 2ஆம் பாகத்தின் கதையை நடிகர் சூர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கினார். அந்தப் படத்தை லிங்குசாமி தயாரிப்பதாக இருந்தது. ஆனால் லிங்குசாமிக்கு ஏற்பட்ட கடன் பிரச்னையால் அவரால் இந்தப் படத்தை தயாரிக்க முடியவில்லை. எனவே சதுரங்கவேட்டை 2-ஆம் பாகத்தை ஞானவேல்ராஜா அண்டர்டேக் பண்ண முன் வந்தார். ஆனால் அந்தப் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் சதுரங்கவேட்டை 2ஆம் பாகத்தை விரைவில் எடுக்கப்போவதாக மனோபாலா அறிவித்தார். படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் அரவிந்த்சாமி நடித்தால் நன்றாக இருக்கும் என, அவரிடம் இப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அரவிந்த்சாமிக்கு வில்லன் கதாபாத்திரமா? அல்லது கதாநாயகன் கதாபாத்திரமா? என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளார்களாம். அனேகமாக சூர்யாவுக்கு பதில் அரவிந்த்சாமியே நடிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
'தனி ஒருவன்' படத்தின் சித்தார்த் அபிமன்யூ கேரக்டர் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக களமிறங்கினார் அரவிந்த்சாமி. தற்போது 'போகன்' படத்தில் நடித்துள்ள அவர், சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.