இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
தினேஷ் நடித்து வரும் படம் உள்குத்து. அட்டகத்தி நந்திதா ஹீரோயின். பிரபல கிராபிக்ஸ் நிபுணர் கார்த்திக் ராஜு இயக்குகிறார். பி.கே.சர்மா ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். திருடன் போலீஸ் படத்தை தயாரித்த செல்வகுமார் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் தினேசுக்கு இரண்டு கெட்-அப் இருக்கிறது. ஒன்று மீனவ இளைஞன் கெட்அப், மற்றொன்று அவர் கபாலியில் வைத்திருந்த கெட்-அப். ஒட்ட வெட்டிய தலைமுறை, சிறிய தாடி தலையை சுற்றி வட்டமான ஒரு மெஷின் கட்டிங் என அதே கெட்-அப்பில் நடித்திருக்கிறார். இந்த கெட்அப் ஏன் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
இது குமரி மாவட்டத்தில் வாழும் மீனவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. தினேஷ் மீனவ இளைஞராக நடிக்கிறார். நந்திதா ஜவுளி கடையில் வேலை செய்யும் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். கன்னியாகுமரி, நாகர்கோவில பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.