தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இருந்து நீர்ப்பறவை வரை விஷ்ணுவின் மார்க்கெட் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆனால் முண்டாசுப்பட்டி படத்தின் வெற்றிக்குப்பிறகு அதுவரை விஷ்ணுவை கண்டுகொள்ளாமல் இருந்த இயக்குனர்கள்கூட அவர் பக்கம் லேசாக திரும்பிப்பார்க்கத் தொடங்கினர். அதையடுத்து ஜீவா, இன்று நேற்று நாளை படங்களும் சுமாரான வெற்றி பெற்ற நிலையில், எழில் இயக்கத்தில் விஷ்ணு நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் அவருக்கு பெரிய ஹிட் படமாக அமைந்தது. குறிப்பாக, 4 கோடியில் தயாரான அந்த படம் 19 கோடி வரை வசூல் செய்தது.
அதனால், அந்த படத்திலிருந்து விஷ்ணுவின் மார்க்கெட் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதையடுத்து, தன்னை அறிமுகம் செய்த சுசீந்திரன் இயக்கத்தில் மாவீரன் கிட்டு என்ற படத்தை தயாரித்து நாயகனாக நடித்து வருகிறார் விஷ்ணு. இந்த படம் முதன்முறையாக அவரது நடிப்பில் அதிக பட்ஜெட்டில் அதாவது 20 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. சரித்திர பின்னணி கொண்ட இந்த படத்தில் பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிப்பதோடு, சூரியும் பிரதான காமெடியனாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம், தனது மார்க்கெட் எகிறி விட்டதை முன்வைத்து, மெகா பட்ஜெட் கதைகளாக கேட்டுவருகிறார் விஷ்ணு.