இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் சூரி. ஒரு நேரத்தில் சந்தானத்திடம் கால்சீட் வாங்கி விட்டு ஹீரோக்களிடம் கால்சீட் வாங்கியது போன்று, இப்போது சூரியின் கால்சீட்டைப் பொறுத்துதான் ஹீரோக்களிடம் கால்சீட் பேசி வருகின்றனர். அந்த அளவுக்கு பிசியான காமெடியனாகி விட்டார் சூரி. அதோடு, அவரது நெருக்கமான நடிகர்களான சிவகார்த்திகேயன், விமல், விதார்த், விஷ்ணு போன்ற நடிகர்கள் கால்சீட் கேட்டாலும் உடனடியாக கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் சூரி, தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்
ஆனால் இப்படி தான் ஆரம்பத்தில் நடித்த நடிகர்களை விட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தபோதும், தான் வளருவதற்கு காரணமாக இருந்த ஹீரோக்களை அவர் இப்போதும் மறப்பதில்லையாம். அவ்வப்போது அவர்களுக்கு போன் போட்டு நலம் விசாரித்து வருகிறாராம். அந்த வகையில், தன்னுடன் ஆத்மார்த்தமான பழகிய விமல், விதார்த், சிவகார்த்திகேயன், விஷ்ணு போன்ற நடி கர்களை பங்காளி என்றுதான் உரிமையோடு அழைத்து வருகிறார் சூரி.