ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
குழந்தை நட்சத்திரம் சாதன்யா நடிக்கும் புதிய படம் நிசப்தம். சாதன்யா தவிர அபிநயா, கிஷோர், ராமகிருஷ்ணா, ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். மிராக்கிள் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கிருப்பா கதியோன், ஜெரதி லாரன்ஸ் தயாரிக்கிறார்கள். எஸ்.ஜே.ஸ்டார் ஒளிப்பதிவு செய்கிறார் ஷான் ஜலீஸ் இசை அமைக்கிறார். மைக்கேல் அருண் இயக்குகிறார்.
"இரண்டு வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இதனை உருவாக்கி உள்ளோம், 8 வயது சிறுமியான சாதன்யாதான் கதையின் நாயகி. அந்த உண்மை சம்பவம் நடந்த இடத்திலேயே படப்பிடிப்பையும் நடத்தி உள்ளோம். முழு படமும் பெங்களூரிலேயே படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பாடல்கள் அனைத்தையும் நா.முத்துகுமார் எழுதி உள்ளார். விரைவில் பாடல் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. என்கிறார் இயக்குனர் மைக்கேல் அருண்.