‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'குக்கூ' ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், காயத்ரி கிருஷ்ணா, ரம்யா பாண்டியன், மு.ராமசாமி, பவா செல்லதுரை உட்பட பலர் நடித்திருக்கும் படம் - 'ஜோக்கர்'. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. செழியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'ஜோக்கர்' படத்திற்கு விமர்சன ரீதியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
அதே நேரம் ஓப்பனிங் இல்லாமல் வசூல் சற்று குறைவாக இருந்தது. பத்திரிகை மற்றும் இணையதளங்களில் வெளியான பாஸிட்டிவ்வான விமர்சனம் காரணமாக ஜோக்கர் படத்துக்கு தற்போது நாளுக்கு நாள் வரவேற்பு கூடிக் கொண்டே வருகிறது. படம் வெளியான முதல் நாளைவிட இரண்டாவது, மூன்றாவது நாட்களில் ஜோக்கர் படத்திற்கு வரும் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளதாக படக்குழுவினர் சொல்கின்றனர்.
அதோடு, 'ஜோக்கர்' படத்திற்கான திரையரங்கங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள், விமர்சகர்கள் என பல தரப்பினரது பாராட்டுக்களையும் பெற்று வரும் ஜோக்கர் படத்தை, திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தை பார்த்துவிட்டு நெகிழ்ந்து போன நடிகர் தனுஷ், ''ஜோக்கர்..- யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர். கண்களில் கண்ணீர். தயவு செய்து பாருங்கள்!'' என்று 'ஜோக்கர்' பற்றி ட்வீட் செய்துள்ளார்.