‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆன கதையாக, சமூகவலைத்தளம் பிரபலமான பிறகு மொபைல் வைத்திருப்பவர்கள் எல்லாம் விமர்சகர்களாகிவிட்டார்கள். இதை வைத்து சிலர் கோடம்பாக்கத்தில் பணம் சம்பாதிக்கவும் புறப்பட்டுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, சமூகவலைத்தளத்தினால் இன்னொரு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.
ஒரு படத்தின் அதிகாரபூர்வ போஸ்டர் அதாவது, ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் முன்பே, அப்படத்தின் போஸ்டரை ரசிகர்களே உருவாக்கி ட்விட்டர், பேஸ்புக்கில் வெளியிட்டு விடுகின்றனர். இவற்றில் எது ஒரிஜினல் எது போலி என்று தெரியாமல் மக்கள் குழம்பிவிடுகின்றனர். இதற்கு எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படமும் தப்பவில்லை.
சமீபத்திய படங்களில் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போஸ்டர்கள் மிக அதிக அளவில் வெளியிடப்பட்டது இந்தப்படத்திற்குத்தான். அத்தனை போஸ்டர்களும் பார்ப்பதற்கு ஒரிஜினல் போன்ற அற்புதமான டிசைன்களால் உருவாக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் குழம்பிப் போகிறார்கள்.
இந்நிலையில், 'எந்திரன்' 2ஆம் பாகமான '2.0' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு 2.0 படத்தின் டீஸர் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2.0 படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்படும் நிலையில் இந்த வருடத்தில் போஸ்டரோ, டீசரே வெளியாக வாய்ப்பில்லை என்கிறது ஷங்கருக்கு நெருங்கிய வட்டாரம்.