ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
"இம்சை அரசன் 23ம் புலிகேசி", "அறைஎண் 305ல் கடவுள்", "இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்" உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிம்புதேவன். அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்மரமாக இறங்கியிருந்தார். இதில் தனுஷை வைத்து படம் பண்ணபோவதாக முன்பு கிசுகிசுக்கள் வந்தது. இப்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. அந்தபடத்திற்கு "மாரீசன்" என்று பெயரிட்டுள்ளனர். யு.டி.வி., நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருக்கும் இப்படம் ரூ.30 கோடி செலவில் உருவாக இருக்கிறது. கி.மு., 12ம் நூற்றாண்டை தழுவிய கதை என்பதால் படத்திற்கு இவ்வளவு பட்ஜெட்டாம். சிம்பு தேவனின் கதையைக் கேட்ட யுடிவியின் இப்போதைய உரிமையாளர்களான வால்ட் டிஸ்னி நிறுவனத்தினர், இந்தக் கதை ஆங்கிலப் படங்களின் பாணியில் கச்சிதமாக உள்ளது. தாராளமாக படமெடுங்கள் என பாராட்டினார்களாம். டிசம்பரில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் மாரீசன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார், கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதுவரை தனுஷ் நடித்த படங்களிலே, மாரீசன் படம் தான் அதிக பொருட்ச்செலவில், அதாவது ரூ.30 கோடியில் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.