தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் |
1990-ல் பாரதிராஜா இயக்கிய என் உயிர் தோழன் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்தவர் தென்னவன். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தென்னவன், அதன்பிறகு விக்ரமின் ஜெமினி, கமலின் விருமாண்டி ஆகிய படங்களில் வெயிட்டான வேடங்களில் நடித்தார். தொடர்ந்து சண்டக்கோழி, வாகைசூடவா, சுந்தரபாண்டியன், உன்னோடு கா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக செண்டிமென்டான வேடங்களாக நடித்துள்ள தென்னவன், தனக்கென ஒரு தனி இடத்தையும் பிடித்து வைத்திருக்கிறார்.
மேலும், இவர் என் உயிர் தோழன் படத்தில் நடிகராக அறிமுகமானபோதும், அதற்கு முன்பே இயக்குனர் பாரதிராஜாவிடத்தில் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவராம். அவரைத்தான் என் உயிர்த்தோழனில் நடிகராக்கியிருக்கிறார் பாரதிராஜா. அதன்பிறகு தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வந்ததால் தனது இயக்குனர் ஆசையை தள்ளி வைத்து விட்டு நடித்து வந்த தென்னவனுக்கு இப்போது படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டிருக்கிறதாம். அதனால், மனதை தொடும் ஒரு கிராமத்து கதையை தற்போது ரெடி பண்ணிக்கொண்டிருக்கும் அவர், அதில் நடிப்பதற்கும் சில நடிகர் நடிகைகளிடம் கால்சீட் பேசி வருகிறார்