போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சினிமாவில் 12 ஆண்களுக்கு மேலாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. சமீபத்தில் நாயகி என்ற படத்தில் நடித்தார். இப்படம் தெலுங்கில் ரிலீஸாகிவிட்டது, தமிழில் விரைவில் வெளியாக இருக்கிறது. நாயகியை தொடர்ந்து த்ரிஷா, ‛மோகினி' என்ற படத்தில் நடிக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்படத்தில் த்ரிஷா, சமையல் கலை நிபுணராக நடிக்கிறார். ‛மதுர' இயக்குநர் மாதேஷ் இயக்குகிறார்.
‛மோகினி' படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் லண்டனில் நிறைவடைந்துள்ளது. அடுத்தப்படியாக தாய்லாந்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்தப்படத்தில் த்ரிஷாவுக்கு ஆக்ஷ்ன் காட்சி எல்லாம் உள்ளதாம். குறிப்பாக கயிற்றில் தலைகீழாக தொங்கியபடி எல்லாம் சாகசம் செய்ய உள்ளாராம். டூப் போடாமல் நடிக்க த்ரிஷாவே விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதனால் சென்னையில் தலைகீழாக தொங்கி பயிற்சி எடுத்து வருகிறார் த்ரிஷா.