தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
இப்போதெல்லாம் கன்னா பின்னாவென்று படத்திற்கு தலைப்பு வைக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது கன்னா பின்னா என்றே ஒரு படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். குறும்பட இயக்குனர் தயா இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். அஞ்சலிராவ் ஹீரோயின். ரோஷன் சேதுராமன் இசை அமைக்கிறார், ஜெரால்டு ராஜமாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.
"அழகான பெண்ணைத்தேடி சென்னை வரும் ஹீரோ சென்னையில் படும் அவஸ்தையை சொல்கிற படம். இந்தப் படத்தில் முதன் முறையாக பயில்வான் மாதிரி உடல் அமைப்பு கொண்ட நிஜ பவுன்சர்களை காமெடியன்களாக பயன்படுத்தியிருக்கிறோம். படத்தின் தலைப்பு தான் கன்னா பின்னாவே தவிர திரைக்கதை, காட்சி அமைப்பு, எல்லாமே பக்காவாக பிளான் போட்டு எடுத்திருக்கிறோம். ரசிகர்களை இரண்டரை மணி நேரம் சிரிக்க வைக்க வேண்டும் என்பதை தவிர வேறெந்த நோக்கமும் இல்லை" என்கிறார் கன்னா பின்னா இயக்குனர் தியா.