ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்டாக வலம் வந்தவர் ஜெய்சங்கர். சிறு பட்ஜெட் படங்களின் ஆஸ்தான நடிகர். இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்காமல் கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொண்டு கடைசி வரை நடித்த ஒரே நடிகர். கடைசி வரை ஹீரோவாக நடித்தவர். 80களில் ரஜினி, கமல் கை ஓங்கவே சத்தமில்லாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். அதன் பிறகு குணசித்ர கேரக்டர்கள் வந்தபோது நடித்தால் ஹீரோவாகத்தான் என்று மறுத்து வந்தார்.
இந்த நேரத்தில்தான் ஏவிஎம் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'முரட்டுக்காளை' படத்தை தயாரித்தது. இதற்கு பஞ்சு அருணாசலம் கதை வசனம் எழுதியிருந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். 'புதிய வார்ப்புகள்' படத்தில் அறிமுகமான ரதி ஹீரோயினாக நடித்தார். சுமலதா ரஜினியை ஒருதலையாக காதலிப்பவராக நடித்தார்.
இந்தப் படத்தின் வில்லன் கேரக்டர் மிகவும் பவர்புல்லானது. ஊர் ஜமீன்தார்தான் வில்லன். அதனால் இதுவரை வில்லான நடித்திராத ஒருவரை நடிக்க வைக்கலாம் என்ற கருதிய எஸ்.பி.முத்துராமன் அப்போது சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ஜெய்சங்கரை அணுகினார். ஆனால் அவருக்கு வில்லனாக நடிப்பதில் விருப்பம் இல்லை. என்றாலும் படத்தை தயாரிப்பது ஏவிஎம் என்ற பெரிய நிறுவனம் என்பதால் ஒப்புக்கொண்டார்.
பல வருட இடைவெளிக்குப் பிறகு ஜெய்சங்கர் வில்லனாக நடிக்கிறார் என்பதே படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஜெய்சங்கர் வில்லான நடிப்பது ரஜினிக்கு ஒப்புதல் இல்லை. “அவர் மிகப்பெரிய ஹீரோ, நான் அவரது ரசிகன். அவர் எப்படி எனக்கு வில்லன்” என்று தயங்கினார் பின்னர் ஒருவழியாக அவரை சம்மதிக்க வைத்தனர்.
படத்தில் வில்லனுக்கு ஒரு பாலியல் பலாத்கார காட்சி உண்டு. ரஜினி காதலி ரதியை ஜெய்சங்கர் கற்பழிக்க முயற்சிப்பது போன்ற காட்சி. இந்த காட்சி மென்மையாக படமாக்கப்பட வேண்டும் என்றார் ரஜினி. அதனால் ஜெய்சங்கர் துரத்துவது போலவும் ரதி ஓடுவது போலவும் காட்சி அமைத்திருப்பார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் அவரை போலீசார் அடித்து இழுத்து செல்வது போன்று காட்சி இருந்தது. “அவர் பெரிய லெஜண்ட் அப்படிபட்ட கட்சியில் என்னால் அவரை பார்க்க முடியாது. வேறு மாதிரி காட்சி வையுங்கள்” என்று ரஜினி சொன்னதால் போலீசிடம் பிடிபடுவதற்கு முன்பு ஜெய்சங்கர் தன்னைத்தானே சுட்டுக் தற்கொலை செய்வதாக காட்சி மாற்றி அமைக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு பிறகு ஜெய்சங்கர் வில்லனாக ஒரு ரவுண்ட் வந்தார். ஆனால் ரஜினி தந்த கவுரவத்தை மற்றவர்கள் தரவில்லை.