‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'தட்டயன் மறையத்து' படத்தை தமிழில் 'மீண்டும் ஒரு காதல் கதை' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். வால்ட்டர் பிலிப்ஸ் என்ற புதுமுகம் நடித்துள்ளார். 'தட்டயன் மறயத்து' படத்தில் நடித்த இஷா தல்வாரே இதிலும் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு மிர்சி சிவாவுடன் 'தில்லு முல்லு' படத்தின் மூலம் ஏற்கெனவே தமிழுக்கு அறிமுகமாகிவிட்டார். இவர்கள் தவிர மனோஜ் கே.ஜெயன், தலைவாசல் விஜய், நாசர், வித்யூலேகா ராமன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கி உள்ளார். இவர் இயக்கிய அத்தனை படங்களுமே ரீமேக் படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அணைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி 2 மாதங்கள் ஆகிறது. தற்போது வருகிற ஆகஸ்ட் 5ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப்புலி இண்டர்நேஷனல் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இது ஒரு இந்து பையனுக்கும், இஸ்லாமிய பெண்ணுக்குமான காதல் கதை.