‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
2016ம் ஆண்டு ஜுலை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இன்று. 'வெள்ளிக்கிழமை 13ம் தேதி' என்ற ஒரே ஒரு தமிழ்ப் படம் மட்டுமே இன்று வெளியாகிறது. இந்தப் படத்தையும் சேர்த்தால் இந்த 2016ம் ஆண்டில் இதுவரை வந்த படங்களின் எண்ணிக்கை 122 ஆகிறது. ஆகஸ்ட் மாதம் வெளிவர உள்ள படங்கள் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ள படங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் எப்படியும் 50 படங்களாவது வந்துவிடுமோ என்று ஆச்சரியப்பட வைக்கிறது. இதில் சில பெரிய படங்களும், சில மீடியம் பட்ஜெட் படங்களும், சில குறைந்த பட்ஜெட் படங்களும் அடங்கியுள்ளன.
தற்போதைக்கு அடுத்த வாரம் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாக உள்ள படங்களைப் பற்றித்தான் அதிகாரப்பூர்வமாக தேதி குறிப்பிட்டு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் 'திருநாள், மீண்டும் ஒரு காதல் கதை, சண்டி குதிரை, என்னமா கதவுடறானுங்க, காதல் காலம்' ஆகிய படங்கள் அடங்கியுள்ளன. அதன் பிறகு 12ம் தேதி 'தொடரி, வாகா,' வர வாய்ப்புகள் அதிகம். இப்போதெல்லாம் வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் பட வெளியீட்டுத் தேதியை அறிவிக்கிறார்கள். அதனால் 12ம் தேதிக்கும் அதற்கு அடுத்தும் மேலும் சில படங்கள் வரலாம். அதே சமயம் ஆகஸ்ட் வெளியீடு என அறிவிப்பை வெளியிட்டிருக்கும் படங்களின் பட்டியலைப் பார்க்கும் போது யாருக்கு சரியான தியேட்டர்கள் கிடைத்து, வெளியிடுவார்கள் என்பது அப்போதைக்கு அப்போதுதான் தெரிய வரும்.
ஆகஸ்ட்டில் வெளியாவதாகச் சொல்லப்படும் மேலும் சில படங்கள்...“அச்சம் என்பது மடமையடா, ஜோக்கர், முடிஞ்சா இவன புடி, நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல, நம்பியார், யானை மேல் குதிரை சவாரி”. இந்தப் பட்டியல் இன்னும் நீ....ளுமா குறையுமா என்பது ஆகஸ்ட் பிறந்ததும் தெரிந்துவிடும்.