போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், தாணுவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‛கபாலி'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள கபாலி படம் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாய் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. உடுத்தும் ஆடை, உண்ணும் உணவு, பயணிக்கும் வாகனங்கள்(விமானம் உட்பட...) என எங்கு பார்த்தாலும் கபாலி மயமாகத்தான் இருக்கிறது. இப்படம் இந்தவாரம் ஜூலை 22ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாக இருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பே சுமார் 200 கோடி வியாபாரம் பெற்றுவிட்டதாக கூறப்படும் கபாலி படம் சுமார் 500 கோடி வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் திரைத்துறையினருக்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்து லாபம் பார்ப்பது என்று குதிரை கொம்பமாக இருக்கிறது. படத்தை தயாரிப்பதை விட அதற்கு செய்யப்படும் விளம்பரம் ஒருபுறம் இருக்க, அதையும் தாண்டி படத்தை ரிலீஸ் செய்தால் திருட்டு விசிடி அதைவிட பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் படம் வெளியாகி ஒரு மாதத்திற்குள் திருட்டு விசிடி வெளியாகும். ஆனால் இன்றோ படம் வெளியாகும் அன்றே, இன்னும் சொல்லப்போனால் படம் வெளியாவதற்கு முதல்நாள் இரவு கூட படங்கள் திருட்டுத்தனமாக ரிலீஸாகி விடுகின்றன.
இதுப்போன்று ஒரு பிரச்னை கபாலி படத்திற்கு எழுந்துவிடக்கூடாது என்று தயாரிப்பாளர் தாணு, சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டு, அனுமதியின்றி இயங்கும், குறிப்பாக படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் இணையதளங்களை முடக்க வேண்டும் என்று கோரினார். அதற்கும் கோர்ட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட இணையதளங்களை முடக்க உத்தரவிட்டது. இதனால் தாணு தரப்பு சற்று நிம்மதி அடைந்தாலும் சில இணையதளங்கள் வீம்புக்கு என்றே படத்தை ரிலீஸ் செய்வோம் என்று கங்கனம் கட்டிக்கொட்டு திரிகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கபாலி படத்தின் 30 நிமிட காட்சிகள் சில தினங்களுக்கு முன்னர் ஒரு இணையத்தில் வெளியானதாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் ‛டார்க் வெப்' என்ற இணையதளம் கபாலி படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. இந்த இணையதளத்தை அவ்வளவு எளிதில் யாரும் நுழைந்துவிட முடியாது. இருந்தாலும் இந்த இணையதளம் மூலமாக திருட்டு விசிடி வெளியாக கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அதேசமயம் அந்த இணையதளத்தில் 'கபாலி' படம் வெளியாகவில்லை என்றும், யாரோ சிலர் வேண்டுமென்றே இந்த புரளியை கிளப்பிவிட்டதாக கூறப்படுகிறது.