‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதிவ்யா. தொடர்ந்து அவருடன் பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கடுத்து சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், ரெமோ ஆகிய படங்களை கீர்த்தி சுரேஷ் கைப்பற்றிக்கொண்டார். ஆனபோதும், அதன்பிறகு ஜீவா, வெள்ளைக்கார துரை, ஈட்டி, மருது போன்ற படங்களில் நடித்தார் ஸ்ரீதிவ்யா.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன், மடோனா உள்ளிட்ட சில நடிகைகளின் வரவு காரணமாக, தொடர்ந்து தமிழில் தனக்கு படங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமோ என்று பயந்து போன ஸ்ரீதிவ்யா, தனது தாய்மொழியான தெலுங்கில் புதிய படங்களுக்காக பலத்த முயற்சி எடுத்து வந்தார். ஆனால், கடந்த ஆண்டு அவர் தெலுங்கில் நடித்த கெரின்தா -என்ற படம் தோல்வியடைந்ததால், எதிர்பார்த்தபடி அங்கு புதிய படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை.
ஆனால் இந்த நேரத்தில் தமிழில், காஷ்மோராவிற்கு பிறகு சங்கிலி புங்கிலி கதவ தொற, மாவீரன் கிட்டு போன்ற படங்கள் அடுத்தடுத்து கமிட்டானதால் இந்த படங்கள் மூலமாக தமிழில் தனது மார்க்கெட் எகிற வாய்ப்பிருப்பதாக பீல் பண்ணும் ஸ்ரீதிவ்யா, தெலுங்கு படங்களுக்காக பெரிய முயற்சிகளை எடுப்பதை தவிர்த்து, தமிழில் பெரிய ஹீரோ படங்களை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.