Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அவார்டு படம்!

16 ஜூலை, 2016 - 15:12 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-acting-in-Award-Film

காக்கா முட்டை படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்திற்கு முன்பும், பிறகும் அவர் பல படங்களில் நடித்திருந்தபோதும், காக்கா முட்டை படம்தான் அவருக்கு ஒரு அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்தது. அதோடு அந்த படத்தைப்பார்த்து விட்டு டாடி என்ற இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பும் ஐஸ்வர்யாவுக்கு கிடைத்தது. இங்கு முன்னணி நடிகையாக இருக்கும் பலருக்கு இந்திப்பட வாய்ப்பு எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு முயற்சி எடுக்காமலேயே அப்படியொரு வாய்ப்பு கிடைத் தது. அதனால் இங்குள்ள நடிகைகள் அவரை அண்ணாந்து பார்க்கிறார்கள்.


இந்நிலையில், டாடி படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷைக்கேட்டபோது, நான் டாடி இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் ரொம்ப சந்தோசமடைந்தேன். தெலுங்கு பெண்ணான எனக்கு தமிழில் நடிக்க மட்டுமே சான்ஸ் கிடைத்து வந்த நிலையில், தெலுங்கில் நடிக்க முயற்சி எடுத்து வந்தபோது வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் இந்திப்படவாய்ப்பு தானாக தேடி வந்தது. அதனால் அந்த படத்திற்கு கால்சீட் கொடுத்து நடித்து வருகிறேன். படப்பிடிப்பு நடந்து வருகிறது.


மேலும், டாடி படம் கமர்சியல் படமல்ல. இதுவும் காக்கா முட்டை படம் போன்று விருதுக்கான படம்தான். மற்றவர்கள் எதிர்பார்க்கிற மாதிரி நான் மாடர்ன் கெட்டப்பில் விதவிதமான கவர்ச்சி உடைதரித்து அந்த படத்தில் நடிக்கவில்லை. ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தில் எந்தவித பந்தாவும் காட்டாமல் பவ்யமாக பர்பாமென்ஸ் கொடுத்து வருகிறேன். அந்த வகையில், இந்த படம் எனக்கு இந்தியில் இன்னொரு காக்கா முட்டையாக அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in