ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. தற்போது ஜெயம் ரவியுடன் போகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் ஆர்வம் மிக்கவர் ஹன்சிகா. தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஹன்சிகாவின் இந்த சேவையை தொடர்ந்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஹன்சிகாவை பற்றி வீடியோ ஒன்று வெளியாகி பலரின் பாராட்டுதலுக்கு உள்ளாகி உள்ளது. அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது...? ஹன்சிகா, சாலையோரத்தில் உறங்குபவர்களுக்கு போர்வை, உடைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை அவரே நேரடியாக சென்று வழங்கியிருக்கிறார். ஹன்சிகாவின் இந்த சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.