‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ரஜினியின் கபாலி படத்தின் டிரைலர், பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்த மாதம் அப்படம் உலகமெங்கிலும் வெளியாகிறது. குறிப்பாக, இதற்கு முன்பு ரஜினி படங்கள் வெளியானதை விட பல அயல்நாடுகளில் அதிகமான தியேட்டர்களில் கபாலி வெளியாகிறது. குறிப்பாக, இதுவரை எந்த தமிழ் படமும் திரையிடப்படாத பாரீசின் லீ கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் கபாலி படம் திரையிடப்படுவது உலக அளவில் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. அந்த தியேட்டரில் இப்போதே கபாலி ரஜினியின் கட்அவுட் ஒன்று வைக்கப்பட்டிருகிறது. அதை அங்குள்ள தமிழர்கள் படமெடுத்து வாட்ஸ் அப்புகளில் அப்டேட் செய்து வருகின்றனர்.
மேலும், கபாலி படத்தின் பெரும்பகுதி மலேசியா நாட்டில் நடந்ததோடு, அங்குள்ள அரசு சார்பிலும் படப்பிடிப்பு நடத்த பெரிய அளவில் உதவிகள் செய்தனர். இந்த நிலையில், ஏர் ஆசிய விமான நிறுவனம், மலேசியாவில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் விமான பயணிகளுக்கு கபாலி பிரியாணியை அறிமுகம் செய்திருக்கிறது. நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த கபாலி பிரியாணி திட்டம், அப்படம் திரைக்கு வரும் வரை நடைபெற உள்ளதாம்.