தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
என்னதான் மலையாள மொழிப்படங்களில் பிஸியாக நடித்தாலும் தமிழ்ப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அங்குள்ள ஹீரோக்களுக்கு எப்போதுமே உண்டு. அதன் காரணமாகவே கடந்த காலங்களில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி மலையாளப்பட ஹீரோக்கள் தமிழ்ப்படங்களில் நடித்துள்ளனர். இளையதலைமுறை ஹீரோக்களில் பிருத்விராஜ் தமிழ்ப்படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் இப்போது நிவின்பாலி. 'நேரம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவின் பாலி அதன் பிறகு மலையாளத்தில் பிசியாகிவிட்டார். தற்போது அவரது நடிப்பில் மற்றுமொரு நேரடி தமிழ் படம் உருவாகிறது. இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக 'யு டர்ன்' கன்னட பட புகழ் ஷரதா ஸ்ரீநாத் நடிக்கிறார், இயக்குனர்கள் கௌதம் மேனன், மிஷ்கின் ஆகியோரிடம் பணிபுரிந்த கௌதம் ராமச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் நிவின் பாலி தவிர மற்றொரு ஹீரோவும் உண்டு! இரண்டாவது ஹீரோவுக்கு ஜோடியாக 'மாயா', 'களம்' உட்பட பல படங்களில் நடித்துள்ள லட்சுமி ப்ரியா நடிக்கிறார். இப்படத்தின் கதை மீனவர்கள் சம்பந்தப்பட்டது என்றும், இதில் லட்சுமி ப்ரியா மீனவ பெண்ணாக நடிக்கிறார் என்றும் தகவல் அடிபடுகிறது! இந்தப் படம் தவிர சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்திலும் நடிக்கிறார் நிவின்பாலி.