‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இது என்ன மாயம் படத்தை அடுத்து வாகா, வீரசிவாஜி, முடிசூடா மன்னன் ஆகிய படங்களில் விக்ரம்பிரபு நடித்து வருவதாகத்தான் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவர் சிங்கை டு சென்னை என்றொரு படத்திலும் நடித்து வருகிறார். மெட்ராஸ் படத்தில் கார்த்தி நடித்தது போன்று இந்த படத்திலும் ஸ்லம் ஏரியாவைச்சேர்ந்த விக்ரம்பிரபு ஐடியில் வேலை பார்ப்பது போன்று கதை அமைந்துள்ளதாம். ஆனபோதும், அவருக்கு பெண் கொடுக்க உறவினர்கள் போட்டி போடுவதுதான் மெயின் கதையாம்.
ஆனால் ஒரு கட்டத்தில் சிங்கப்பூருக்கு வேலை மாற்றலாகி செல்லும் விக்ரம்பிரபு, அங்கு ஒரு பெண்ணை காதலித்து விட்டு சென்னை வர, குடும்பத்தில் பிரச்சினை விஸ்வரூபமெடுத்து விடுமாம். இதையடுத்து முறைமாமன் பெண்ணை மணக்கிறாரா இல்லை சிங்கப்பூர் காதலியை விக்ரம்பிரபு மணக்கிறாரா என்பதுதான் இந்த சிங்கை டு சென்னை படத்தின் கதையாம். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருவாரம்தான் பேலன்ஸ் உள்ளதாம். இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சிங்கப்பூரில்தான் நடந்துள்ளதாம்.