‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாள நடிகர் ஜெயராம், தன் மகன் காளிதாசை, தமிழின் முன்னணி ஹீரோவாக்குவதற்காக, ரொம்பவே மெனக்கெடுகிறார். மலையாளத்தில், சில ஆண்டுகளுக்கு முன், குழந்தை வேடங்களில் ஒரு சில படங்களில் நடித்த காளிதாசுக்கும், மலையாளத்தை விட, தமிழில் தான் நடிக்க ஆசையாம். இதனால், தந்தை ஆதரவுடன் கோலிவுட்டில் கால் பதிக்க முயற்சித்து வருகிறார். ஒரு பக்க கதை, மீன்குழம்பும் மண்பானையும் ஆகிய இரு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில், மீன்குழம்பு... படம், தன்னை, தமிழின் முன்னணி ஹீரோவாக்கி விடும் என உறுதியாக நம்புகிறார். இந்த படத்தில், அவருடன் ஜோடி சேர்ந்திருப்பது, சந்தானம் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் அஸ்னா ஜாவேரி.