இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
குழந்தை நட்சத்திரமாக சினிமா-சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தவர் நிவேதா தாமஸ். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் நடித்து வந்த அவர் ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் கதாநாயகி ஆனார். ஆனால் அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. அதையடுத்து விஜய் யின் ஜில்லாவில் நடித்த நிவேதா தாமஸ், திரிஷ்யம் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்தார். அந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்த நிவேதா தாமஸ் அந்த படமே தமிழில் தனக்கு திருப்பு முனையை கொடுக்கும் என்று எதிர்பார்த்தார்.
ஆனால், கதாநாயகியாக அரிதாரம் பூசிய ஆரம்ப காலத்தில் இருந்தே கிளாமரா நடிக்க மாட்டேன் என்கிற கொள்கையை அவர் விடாப்பிடியாக பின்பற்றியதால், தமிழில் அடுத்தபடியாக படவாய்ப்புகள் இல்லை. ஆனபோதும், தெலுங்கில் ஜூலியட் மற்றும் நானியின் ஜென்டில்மேன் படங்களில் கமிட்டாகி நடித்தார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. மேலும் இப்படத்தில் இவன் வேறு மாதிரி, வேலையில்லா பட்டதாரி, புகழ் படங்களில் நடித்த சுரபியும் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார். ஆக, தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான இரண்டு நடிகைகள் நடித்திருப்பதால், ஜென்டில்மேன் படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிடும் முயற்சிகள் நடக்கிறதாம். இந்த சேதி அறிந்து நிவேதா தாமஸ், சுரபி இருவருமே உற்சாகமடைந்திருக்கிறார்களாம்.