‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபல ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன் 'மின்சார கனவு', 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அதன் பிறகு ஒளிப்பதிவு, விளம்பரப்படங்கள் என பிசியிகிவிட்டார். இந்த படங்கள் வெளியாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் மூன்றாவதாக ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் ராஜீவ் மேனன்! இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
ராஜீவ் மேனன் இயக்கிய 'மின்சார கனவு', 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' படங்களுக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே இப்படத்திற்கும் இசை அமைக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி தேர்வு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இறுதியாக 'பிரேமம்' படப் புகழ் சாய் பல்லவி ஜி.வி.க்கு ஜோடியாக நடிக்க தேர்வாகியிருக்கிறார்.
இதற்கிடையில், ஜி.வி.பிரகாஷ் - சாய் பல்லவி நடிக்கவில்லை என்பதைப்போல் போஸ்டர் ஒன்று வெளியானது. ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் என்ற பெயருடன் ஜனனி அய்யர் கதாநாயகியாக நடிப்பதுபோல் அந்த போஸ்டர் வெளியானது. ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் போஸ்டர் வெளியான சற்று நேரத்தில் அது பொய்யான போஸ்டர் என்றும், விரைவில் இந்த படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று ராஜீவ்மேனன் தன் பி.ஆர்.ஓ. மூலம் அறிவித்துள்ளார்.