ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
வடிவேலுவுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனானவர் சந்தானம். லொள்ளுசபா நடிகராக இருந்து வந்த அவரை சிம்புதான் தனது படங்களில் ஆரம்பத்தில் நடிக்க வைத்தார். அப்படியே வளர்ந்த சந்தானம், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடியனாகி விட்டார். ஆனபோதும் அவருக்குள் இருந்த ஹீரோ ஆசை காரணமாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்த சந்தானம், அதற்கடுத்து இனிமே இப்படித்தான் என்ற படத்திலும் நாயகனாக நடித்தார்.
இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட் இல்லை என்றபோதும் பின்வாங்கவில்லை சந்தானம். தொடர்ந்து காமெடியனாக நடிப்பதில் இருந்து விடுபட்டு தில்லுக்குத்துட்டு, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நாயகனாக நடித்து வந்தார். இதில், தில்லுக்குத்துட்டு படம் ஹாரர் கதையில் உருவாகியிருக்கிறது. பேய்கள் கூட்டத்தில் போய் சந்தானம் மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி தப்பி வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. லொள்ளு சபா ராம்பாலா இயக்கியுள்ள இந்த படத்தின் அனைத்துக்கட்ட வேலைகளும் முடிவடைந்து விட்ட நிலையில், வருகிற ஜூலை 24-ந்தேதி அபபடம் ரிலீசாகிறது. மேலும், தில்லுக்குத் துட்டு படத்தை இதற்கு முன்பு சந்தானம் நடிப்பில் வெளியான படங்களை விடவும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறது தேனாண்டாள் பிலிம்ஸ்.