‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'பிரேமம்' எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா முழுக்க பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அந்தப்படத்தில் அவர் நடித்த மலர் கதாபாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. மலையாளத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடிக்க கவனம் செலுத்தி வரும் சாய் பல்லவி, இப்போது தமிழில் ஜிவி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க உள்ளார்.
புருஸ்லீ, எனக்கு இன்னோரு பேரு இருக்கு படங்களை தொடர்ந்து ஜிவி பிரகாஷ், அடுத்தப்படியாக ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் தான் சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பது ஹைலைட். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.