ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
முன்னணி காமெடியனாக வலம் வந்த சந்தானம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படம் மூலம் ஹீரோவாக மாறினார். இப்படத்தை அடுத்து 'இனிமே இப்படித்தான்' படத்திலும் ஹீரோவாக நடித்தார் சந்தானம். இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனாலும் இனி காமெடியனாக நடிக்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் சந்தானம் தற்போது சர்வர் சுந்தரம், தில்லுக்குத் துட்டு என இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் 'தில்லுக்கு துட்டு' படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சந்தானத்துக்கு சின்னத்திரையில் அடையாளத்தைக் கொடுத்த 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் இயக்குநரான புகழ் ராம்பாலா 'தில்லுக்கு துட்டு' படத்தை இயக்கி வருகிறார். லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கிய காலக்கட்டத்தில் ராம்பாலாவுக்கும், சந்தானத்துக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அதன் பிறகு சந்தானம் சினிமாவில் புகழ்பெற்ற பிறகும் கூட அவரை ராம்பாலா சந்திக்காமலே இருந்தார்.
காமெடியனாக வெற்றியடைந்த தன்னால் கதாநாயகனாக ஜெயிக்க முடியவில்லை என்றதும், ராம்பாலாவை அழைத்து வரச் செய்து தில்லுக்கு துட்டு படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக புதுமுகம் ஷனன்யா நடிக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் டீஸர் நாளை யு டியூப் மற்றும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. சந்தானம் ஹீரோவாக நடிக்கும் முதல் ஹாரர் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.