ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
சிம்பு எழுதும் பாடல்கள் பொதுவாகவே கொஞ்சம் ஒருமையில்தான் இருக்கும். அந்த வகையில், எவன்டி உன்னை பெத்தான் பெத்தான், கையில் கெடைச்சான் செத்தான் செத்தான் -என பல அதிரடியான பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். அதேபோல் பீப் சாங்கில் அதிரடியான ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றன. இந்த நிலையில், சமூக நோக்கத்துடன் வோட் சாங் -என்றொரு பாடலை ரெடி பண்ணியிருக்கிறார் சிம்பு. அந்த பாடலை தான் எழுதத் தொடங்கியதுமே இணையதளத்தில் செய்தி வெளியிட்ட சிம்பு, தற்போது அதை பாடி ரெடி பண்ணி விட்டார். இன்று முதல் அந்த பாடல் யு-டியூப்பில் வெளியாகிறது.
மேலும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பாடலை அவர் எழுதி பாடியிருக்கிறார். அப்படி சிம்பு வெளியிடும் அந்த தேர்தல் பாடல், ஓட்டுப்போட வேண்டியது உன் கடமை, போடலேன்னா உன் மடமை எதுக்குடா போடனும்னு நெனைக்கிறது கொடுமை, அதனால்தான் நம்ம நாட் டுல இவ்வளவு வறுமை என்று தொடங்கும் அந்த பாடலில், போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு, போடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு என்று முடிக்கிறார் சிம்பு. மொத்தம் 12 வரிகளில் இந்த வோட் சாங் உருவாகியுள்ளது.