போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி மற்றும் பலர் நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' படச் சாயலில் இந்தப் படத்தின் டிரைலர் உள்ளது. 'வெள்ளைக்கார துரை' படத்திற்குப் பிறகு எழில் இயக்கியுள்ள படம் இது.
கிராமத்துப் பின்னணியில் நகைச்சவைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் டிரைலரின் கடைசியில் நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் 'அம்மா இங்கே வா..வா...ஆசை முத்தம் தா..தா...' என்ற குழந்தைகள் ரைம்ஸைப் பாடுகிறார். அதைப் பார்த்த சூரி, 'என்னண்ணே பெரிய மனுஷன் நீங்க போய் ரைம்ஸ் பாடிக்கிட்டிருக்கீங்க,” எனக் கேட்கிறார். அதற்கு ரோபோ சங்கர் ,“இப்பலாம் ரைம்ஸ் பாடினாதான் டிரைலர் ரீச் ஆகும் அங்கிள், உங்களுக்குத் தெரியாதா,” என பதிலளிக்கிறார்.
இது 'வேதாளம்' பட டீசரில் அஜித் பாடிய 'கண்ணா மூச்சி ரே ரே...' 'தெறி' பட டீசரில் விஜய் பாடிய 'டிவிங்கிள் டிவிங்கிள்...' ஆகியவற்றைக் கிண்டலடிப்பதாக உள்ளதாக அவர்களது ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். வளர்ந்து வரும் நேரத்தில் விஷ்ணு விஷாலுக்கு இது தேவையா என்ற கருத்தும் எழுந்துள்ளது. இத்தனைக்கும் இந்தப் படத்தை இயக்கியுள்ள எழில் விஜய் நடித்த 'துள்ளாத மனமும் துள்ளும்', அஜித் நடித்த 'பூவெல்லாம் உன் வாசம்', 'ராஜா' படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை அவர்கள் இயக்குனர் எழிலை தற்போது கண்டு கொள்ளவில்லை என்பதற்காக அவரே இப்படி ஒரு காட்சியை வைத்திருப்பாரோ.?