‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ்த் திரையுலகத்தில் விஜய், அஜித் ரசிகர்கள்தான் தற்போது அதிகம் சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்குக் குறைந்துவிட்டார்கள் என கடந்த சில வருடங்களாகவே சிலர் சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால், இன்னமும் அந்த சீனியர் நடிகர்கள் மீதான வரவேற்பு ரசிகர்களிடம் குறையவில்லை என்று இன்று வெளியான கபாலி டீசர் நிரூபித்துள்ளது.
குறிப்பாக ரஜினிகாந்த் என்றாலே ஏதாவது ஒரு புதுமைதான், சாதனைதான் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இன்று காலை 11 மணிக்கு வெளியான கபாலி டீசர் வெளியான 5 நிமிடங்களுக்குள்ளேயே 40000 ஹிட்ஸ்கள், 40000 லைக்குகள் என அசத்தலாக ஆரம்பித்தது. அதன் பின் யு டியூப் ஹிட்ஸ்களின் எண்ணிக்கையை அப்டேட் செய்யாமலே இருந்தது. லைக்குகளின் எண்ணிக்கை மட்டும் ஏறிக் கொண்டே இருந்தது.
20 நிமிடங்களில் 40000 லைக்குகள், 30 நிமிடங்களில் 60000, 50 நிமிடங்களில் 75000, 1 மணி நேரத்தில் 85000, 1 மணி நேரம் 10 நிமிடத்தில் 90000, 1 மணி நேரம் 30 நிமிடத்தில் 100000, 2 மணி நேரத்தில் 1,30,000, 4 மணி நேரத்தில் 1,50,000, 7 மணி நேரத்தில் 1,65,000 லைக்குகள் என ஏறிக் கொண்டேயிருக்கிறது.
அதே சமயம் 1 மணி நேரத்திற்குள்ளாகவே 1 மில்லியன், அதாவது 10 லட்சம் ஹிட்ஸ்களைத் தொட்டதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. சற்று முன்னர் வரை(மாலை 6.40மணி) 18,84,000 ஹிட்ஸ்களைக் கடந்து தனிப் பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
வேதாளம் பட டீசரை, தெறி படத்தின் டீசர் முறிடியத்தது. தெறி டீசரை தற்போது கபாலி முறியடித்துள்ளது. 60 வயதைக் கடந்த ஒரு நடிகராக இருந்தும் அனைத்து ரசிகர்களின் அமோக ஆதரவு ரஜினிக்கு எப்போதுமே உண்டு என்று இன்றைய கபாலி டீசரின் சாதனை இந்தியத் திரையுலகில் புரிய வைக்கப்பட்டுள்ளது.
டிவிட்டரில் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் டிரென்டிங்கில் தொடர்ந்து பல மணி நேரங்கள் இருந்ததும் மற்றுமொரு சாதனை.
வழக்கம் போல மீம்ஸ் கிரியேட்டர்கள் விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி தெறிக்க விட்டுக் கொண்டிருந்தனர்.
கபாலி டீசர் மட்டுமே இன்றைய கொண்டாட்டத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.