‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தெறி வெற்றிப்படம் தந்த கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'கபாலி' படத்தில் ரஜினி இன்டர்நேஷனல் டானாக நடித்திருக்கிறார். அதனாலோ என்னவோ பாட்ஷா படத்தைப் போலவே கபாலி படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறிக் கிடக்கிறது. உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதி கபாலி டீஸர் வெளிவரும் என சில நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாக டீசர், டிரெய்லரை நள்ளிரவில் வெளியிடுவது வாடிக்கையாக இருக்கிறது. தன்னுடைய ரசிகன் காத்துக்கிடக்கட்டுமே என்ற அலட்சியம்தான் இப்படியொரு நேரத்தில் டீசர், டிரெய்லரை வெளியிடுவதற்கு அடிப்படையான காரணம். கபாலி டீசரையும் இரவு 12 மணிக்கு வெளியிடலாமா என ஆலோசித்தாராம் இயக்குநர் பா.ரஞ்சித். இதற்கு ரஜினி ஒப்புக்கொள்ளவில்லையாம். பகல் நேரத்தில்தான் வெளியிட வேண்டும் என்று சொல்லிவிட்டாராம்.
அதன் பிறகே கபாலி டீசரை காலை 11 மணியளவில் தன்னுடைய யு டியூப் சேனலில் வெளியிட முடிவு செய்தாரம் தாணு. இதனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் மே முதல் தேதி காலை11 மணிக்காக இப்போதே தவம் கிடக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ரஜினியின் புண்ணியத்தில் 'கபாலி'யை காலையிலேயே காணவிருப்பதால் கூடுதல் உற்சாகத்திலிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.