ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சரத்குமாருக்கு எதிராக விஷால் அணியினர் எதிர்ப்புக்குரல் எழுப்பி அணி திரண்டபோது அவர்களை முதலில் அங்கீகரித்தது கமல்தான். அது மட்டுமல்ல, அவர்களை தேர்தலில் போட்டியிட வைத்து சரத்குமார் அணியை வீழ்த்தியதிலும் கமலுக்கு பங்கு உண்டு. அண்மையில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கும் காலை மாலை என இரண்டு தடவை வந்தார். இப்படியாக நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு ஆதரவாக இருக்கும் கமல், நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிதிக்காக தன்னால் இயன்ற வழிகளில் நிதி கிடைக்க செய்ய தீர்மானித்துள்ளார்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ், லைக்கா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் சபாஷ் நாயுடு படத்தின் துவக்கவிழாவை நடிகர் சங்கத்தின் இடத்தில் நடத்தினார். இந்த விழாவிற்காக அங்கே 12 லட்சம் செலவில் 'தற்காலிக ஏசி ஹால்' ஒன்றையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். இங்கே விழா நடத்தியதற்கு வாடகையாக இரண்டரை லட்சம் ரூபாயை நடிகர் சங்கத்திற்கு நன்கொடை வழங்கினார் கமல்ஹாசன். இதே விழாவில், நடிகர் சங்கத்துக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை தருவதாக லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் அறிவித்தது. இதைப்போல் தொடர்ந்து நடிகர் சங்க வளாகத்தில் நடத்தப்படும் விழாக்களின் மூலம் கிடைக்கப்பெறும் நன்கொடையை நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தவும் விஷால் திட்டமிட்டுள்ளாராம்.