இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள படம் 24. மே 6-ந்தேதி வெளியாகும் அந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா வெளியிடுகிறார். அதோடு, இதுவரை தமிழ்ப்படங்களின் வசூல் டார்க்கெட் 100 கோடியாக இருக்க, இந்த படத்தை 200 கோடி டார்க்கெட் வைத்து வெளியிடுகிறேன் என்கிறார்.
அவர் மேலும் கூறும்போது, இந்த 24 படத்தை எங்களது ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது. சூர்யா முதன்முறையாக 3 வேடங்களில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கும் படம் என்பதால் இதற்கு ரசிகர்களுக்கிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனால், இதற்கு முன்பு சூர்யா படங்கள் வெளியானதை விடவும் இந்த படத்தை அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறோம். அந்த வகையில், உலகமெங்கிலும் 2150 தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளது. படம் வெளியான பிறகு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும்.
மேலும், சமீபகாலமாக 100 கோடி கிளப்பில் இணையத்தான் முன்னணி நடிகர்களின் படங்கள் போட்டி போட்டு வருகின்றன. ஆனால் சூர்யாவின் இந்த படம் தமிழகத்தில் 200 கோடி கிளப்பை ஆரம்பித்து வைக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஞானவேல்ராஜா.