‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ள இறைவி படம் மே 27 அன்று வெளி வரவிருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து தனுஷ் தயாரித்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார். தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் இப்படத்தில் தனுஷுடன் யார் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது! ஏற்கெனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ஜிகர்தண்டா' படத்தில் கதாநாயகியாக நடித்த லட்சுமி மேனனை இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வைக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளாராம். அதற்கு தனுஷ் சம்மதித்துவிட்டார்.
தற்போது லட்சுமி மேனனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இப்படத்திற்கு யார் இசை அமைக்கப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய சாய்ஸாக சந்தோஷ் நாராயணனை சொல்லி இருக்கிறார். தனுஷோ அனிருத்தை இசையமைப்பாளராக கமிட் பண்ணும்படி சொன்னாராம். அனிருத் வேண்டாம், பாடல்களை தர தாமதப்படுத்துவார் என்று கார்த்திக் சுப்புராஜ் சொல்லி வருகிறாராம். தனுஷிடமிருந்து இறுதியான பதில் இன்னும் வரவில்லையாம்.