தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
அக்குபஞ்சர் டாக்டரான பவர் ஸ்டார் சீனிவாசன் சொந்தப் படம் எடுத்து அதன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் காமெடி நடிகர் ஆனார். ஷங்கர் படம் முதல் புதுமுக இயக்குனர்கள் படம் வரை காமெடியனாக நடித்தார். தற்போது முதன் முறையாக ஜெயிக்கப்போவது யாரு படத்தின் மூலம் வில்லனாகிறார்.
புதுமுக இயக்குனர் ஷக்தி ஸ்காட் என்பவர் இயக்கி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் வந்தானா என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஆண்டர் ஜெப்ரீன் இசை அமைக்கிறார். டிட்டு புரொடக்ஷன் சார்பில் ஆர்.பானுசித்ரா தயாரிக்கிறார். படத்தை பற்றி இயக்குனர் ஷக்திஸ்காட் கூறியதாவது:
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டாலும் திருட்டுத் தனமாக நடந்து கொண்டிருப்பது கார்ரேஸ், பைக்ரேஸ் இதில் எத்தனையோ பேர் பலியாகிக் கொண்டிருகிறார்கள். ஆனால் இந்த ஜெயிக்கப் போவது யாரு படத்தில் இந்த ரேஸ் விஷயத்தை முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி இருக்கிறோம். ஐந்து குருப்பை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டு காமெடியில் கலக்கி இருகிறார்கள். மூன்று கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு ஜீப் இதை வைத்து சீரியஸான விஷயத்தை காமெடியாகச் சொல்லி இருக்கிறோம். பவர் ஸ்டார் சீனிவாசன் காமெடி வில்லனாக நடிக்கிறார். பெங்களூர், திண்டிவனம், ஆற்காடு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.