இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
நாளை (ஏப்ரல்-1) ஆம் தேதி டார்லிங்-2, ஹலோ நான் பேய் பேசுறேன், உயிரே உயிரே, ஒரு மெல்லியகோடு, என்னுள் ஆயிரம், ஓய், நாரதன் ஆகிய ஏழு படங்கள் வெளியாகவிருந்தது. இவற்றில் ஒரு மெல்லியகோடு, என்னுள் ஆயிரம் ஆகிய இரண்டு படங்களும் நாளை வெளியாகவில்லை. போதிய தியேட்டர்கள் கடைக்காத காரணத்தினால், ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா முதலோனார் நடித்திருக்கும் 'ஒரு மெல்லிய கோடு' படத்தின் ரிலீஸை திடீரென்று வருகிற 8-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.
'ஒரு மெல்லிய கோடு' படத்தின் ரிலீஸை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஷாமுக்கு கடும் அதிர்ச்சி. இந்தப்படம் கை கொடுக்கிறதோ இல்லையோ அதற்கு முன் சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார் நடிகர் ஷாம். சாரதி என்ற அறிமுக இயக்குனர் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு 'காவியன்' என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். ஷாம் ஏற்கெனவே '6' என்ற படத்தை தயாரித்தார். அப்படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. ஆனால் படம் ஓடவில்லை. அதனால் பல கோடி நஷ்டம் அடைந்தார்.
இந்நிலையில்தான் தற்போது அடுத்தப் படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து ஷாம் கூறும்போது, ''நான் தயாரித்து நடித்த '6 படம் எனக்கு லாபத்தை தந்ததோ இல்லையோ நிறைய அனுபவங்களை தந்தது. அந்த அனுபவங்களை வைத்து அடுத்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளேன்'' என்கிறார்.
காவியன் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.