‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விக்ரம் குமார் இயக்கியுள்ள 24 படத்தை தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்திருக்கிறார். தயாரிப்பாளராகிவிட்டாலும் படத்தை நேரடியாக வெளியிடுவதில் அவருக்கு அனுபவம் கிடையாது என்பதால் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவிடம் அந்தப்பொறுப்பை ஒப்படைத்தார். எனவே 24 படத்தின் விளம்பரங்களில் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பெயருக்கு சமமான ஸ்டுடியோ க்ரீன் பெயரும் இருக்கிறது. அதுதான் தற்போது 24 படத்துக்கு தலைவலியாக மாறிவிட்டது.
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யாவின் நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாதது மட்டுமல்ல, அப்படத்தை வாங்கிய அனவருக்கும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஏரியா வாரியாக நஷ்டம் அடைந்தவர்கள் தங்களுக்குள் கூட்டம்போட்டு பேசி, 24 படம் வெளிவருவதற்கு முன் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவிடம் கேட்டுள்ளனர்.
அந்த வகையில் 24 படத்தின் பட்ஜெட்டில் பாதி தொகை தற்போது திருப்பிக் கொடுக்க வேண்டி இருக்கும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள். குறிப்பாக செங்கல்பட்டு ஏரியாவுக்கு மட்டும் 3 கோடி திருப்பிக்கொடுக்க வேண்டுமாம். 24 படத்தை அடுத்த மாதம் கடைசி வாரம் வெளியிட திட்டுமிட்டுள்ளனர். அதற்குள் இந்தப் பணத்தை தரவில்லை என்றால் 24 படத்துக்கு ரெட் போட முடிவு செய்துள்ளனர்.