ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
சந்தானம் தற்போது நடித்து வரும் படம் தில்லுக்கு துட்டு. பேய் படங்களை வாங்கி விநியோகிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயரிக்கிறது. லொள்ளுசபா இயக்குனர் ராம்பாலா இயக்குகிறார். எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். தீபக்குமர் ஒளிப்பதிவு செய்கிறார். மொட்டை ராஜேந்திரன், டி.எம்.கார்த்திக், லொள்ளுசபா மனோகர், சாமிநாதன் உள்பட பலர் நடிக்கிறார்கள். மும்பை மாடல் அழகி சுனையா ஹீரோயின்.
இது சந்தானம் நடிக்கும் காமெடி பேய் படம். பேய்களை விரட்டும் சக்தி பெற சந்தானம் முருகன் கோவிலில் அலகு குத்தி ஆடிப்பாடும் பாடல் ஒன்றை சமீபத்தில் திருவிழா செட் போட்டு படமாக்கினார்கள். சுமார் 500 துணை நடிகர்கள், 100 நடன கலைஞர்கள் ஆடினார்கன். “”சிவன் மகன்டா...” என்ற பாடலை சிவசிதம்பரம் பாடியுள்ளார். கோவில் திருவிழாவில் அவர் பாடும் காட்சியும் படமாக்கப்பட்டது. பெரும் பொருட் செலவில் இந்தப் படம் தயாரகி வருகிறது.