புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
மீகாமன், என்னை அறிந்தால், நானும் ரவுடிதான், கதகளி உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆத்மா. தற்போது தெறி, எஸ்-3 உள்பட சில படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஒரு புதிய படத்தில் டான் வேடத்திலும் நடிக்கிறார். இந்தநிலையில், மாயாபவனம் என்றொரு படத்தில் அவர் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
இதுபற்றி நடிகர் ஆத்மா கூறும்போது, சினிமாவில் நான் ஒரு எடிட்டராகத்தான் என்ட்ரி ஆனேன். அதன்பிறகுதான் நடிப்பதற்கு வாய்ப்புகள் அமைந்தது. அதனால் இந்த மாதிரி நடிகனாகத்தான் சினிமாவில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற பெரிய திட்டமெல்லாம் என்னிடம் எதுவும் இல்லை. கிடைக்கிற எந்த மாதிரியான வேடமென்றாலும் நடித்து ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என்பது தான் எனது நோக்கமாக இருந்தது.
அதனால்தான் ஆரம்பத்தில் வில்லனாக நடித்தேன். சில படங்களில் அதிரடி வில்லன், சில படங்களில் காமெடி கலந்த வில்லன் என படங்களுக்கு ஏற்ப நடித்து வந்தேன். அப்படி நடித்து வந்தபோதுதான் மாயாபவனம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு சரித்திர காலத்து படம். 1936களில் நடக்கும் கதை. அதில் சந்திரகாந்தா என்றொரு வேடத்தில் நடிக்கிறேன். படம் முழுக்க அரசர் காலத்து கெட்டப்பில் நடித்திருப்பதோடு, சுத்தமான இலக்கிய தமிழ் பேசியும் நடித்திருக்கிறேன். அது புதிய அனுபவமாக இருந்தது.
மேலும், இப்படி மாயாபவனம் படத்தில் நான் கதாநாயகியாக நடித்து விட்டபோதும், கதாநாயகனாகவே சினிமாவை தொடரும் எண்ணமில்லை. எந்தமாதிரியான வேடம் என்றாலும் தொடர்ந்து நடிப்பேன். வில்லன், நாயகன், குணசித்ரம், காமெடி என எது கிடைத்தாலும் நடித்து சினிமாவில் நல்லதொரு நடிகனாக வலம் வரவேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார் ஆத்மா.