போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தற்போது ராகவலா லாரன்ஸ் நடிக்கும் மொட்டசிவா கெட்டசிவா படத்தை தயாரித்து வருகிறார். இந்த நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தை மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்குகிறார். ஆர்யா ஹீரோ. ஹீரோயினாக நடிக்க பல முன்னணி நடிகைளுடன் பேச்சு நடந்து வந்தது. தற்போது இறுதியாக மெட்ராஸ், கணிதன் படங்களில் நடித்த கேத்ரின் தெரசா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. காமெடி கலந்த ஆக்ஷன் படம். மஞ்சப்பையில் ராஜ்கிரண் நடித்தது மாதிரி இதிலும் ஹீரோவுக்கு அடுத்து ஒரு முக்கிய கேரக்டர் இருக்கிறது. அதில் சத்யராஜ் அல்லது சரத்குமார் நடிக்கலாம் என்று தெரிகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது.