‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
90களில் முன்னணி நாயகியாக இருந்த நடிகை தேவயானியின் இளைய தம்பியான நகுல், ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் ஐந்து கதாநாயகர்களுடன் ஒருவராக அறிமுகமானார். தொடர்ந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்,” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அமளி துமளி படத்தில் நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்துள்ள நாரதன் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் நகுல், சென்னையை சேர்ந்த ஸ்ருதி பாஸ்கர் என்பவரை காதலித்து வந்தார். இவர்களது திருமண நிச்சயம் கடந்த நவம்பர் மாதம் நடந்தநிலையில் இன்று(பிப்.,28ம் தேதி) இவர்களது திருமணம் சென்னையில் சிறப்பாக நடந்தது. இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.